Hot Posts

6/recent/ticker-posts

3 நிமிடங்களுக்கு மேல் வவுனியாவில் நீடித்த நில அதிர்வு


வவுனியாவிலிருந்து 23 கிலோமீற்றர் தொலைவில் நேற்றிரவு சிறு அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.

அதன்படி, குறித்த நில அதிர்வு நேற்றிரவு 11 மணியளவில் உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.3 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பெரியளவில் அதிர்வுகளை உருவாக்காத மெல்லிய அதிர்வாகவே இதைக் கருதவேண்டியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

சுமார் 2 முதல் 3 நிமிடங்களுக்கு இவ்வாறு நில அதிர்வு நீடித்ததாக அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments