பொதுவாகவே அனைவருக்கும் தங்களது முடியை அழகாகவும் நீளமாகவும் கருமையாகவும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் ஒரு சில குறைப்பாட்டின் காரணமாக முடியை சரியாக பராமரிக்க முடிவதில்லை. ஒரு சிலருக்கும் முடி உதிர்வது குறிப்பிட்ட வயதிலேயே ஆரம்பித்து விடும்.
குறிப்பாக 40 வயதிற்குள் நுழைந்த பிறகு மெனோபாஸ் நெருங்கும் போது உடலில் பல மாற்றங்கள் ஏற்படும்.
அதனால்தான் 40 வயதிற்குப் பிறகு முடியானது அதிகமாக கொட்டும். அந்தவகையில் 40 வயதிற்கு பிறகு முடிக் கொட்டுவதை தடுப்பதற்கு என்ன செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
முடி வளர்ச்சிக்கு தேங்காய் பால்
தேங்காய் பால் அதன் ஊட்டமளிக்கும் பண்புகளுக்காக நீண்ட காலமாக பயனுள்ளதாக கருதப்பட்டு வருகிறது.
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிரம்பிய தேங்காய் பால், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும், உச்சந்தலையை ஈரப்பதமாக்கும்.
இயற்கையான கூந்தல் வளர்ச்சிக்கும், உங்கள் முடியின் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேங்காய் பாலை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
பயன்படுத்தும் முறை
* முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் எடுத்து அதில், பாதாம் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
* பின் அதை பருத்தியின் உருண்டையை வைத்து வேர்களில் தடவவும்.
* இந்த முறையை இரவில் செய்து காலையில் முடியை நன்கு கழுவ வேண்டும்.
* இந்த முறையை வாரத்தில் 2 நாட்கள் செய்தால் நல்ல பலனை பெறலாம்.
0 Comments