வாட்ஸ் அப் செயலியில் விரைவில் தமிழில் பேசினால் ஆங்கிலம் உள்ளிட்ட எந்த மொழியிலும் வாய்ஸ் மற்றும் சாட்கள் தானாகவே மாற்றிக் கொள்ளும் அம்சம் அறிமுகமாக உள்ளது.
வாட்ஸ்அப் புதிய அப்டேட்
ஏஐ வந்த பிறகு மக்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப், எக்ஸ் உள்ளிட்ட செயலிகள் புதிய அப்டேட்டுகளை கொண்டு வந்து அசரடித்துக் கொண்டிருக்கின்றன. இதுவரை கற்பனை செய்து கூட பார்க்கமுடியாத தொழில்நுட்ப அற்புதங்களை எல்லாம் யூசர்கள் ஈஸியாக பயன்படுத்தும் வகையில் அப்டேட்டாகவும் அந்த நிறுவனங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாகவே வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் ஒன்று விரைவில் வர இருக்கிறது.
தமிழ் டூ ஆங்கிலம் ஈஸி
அதில் வாய்ஸ் நோட், சாட்டிங் உள்ளிட்டவைகளை எந்த மொழியில் வேண்டுமானாலும் நீங்கள் அனுப்பிக் கொள்ள முடியும். அதற்காக, மொழி தெரியவில்லையே என்ற கவலை பட தேவையில்லை. உங்களுக்கு தெரிந்த மொழியில் வாய்ஸ் நோட் மற்றும் சாட்டிங் உருவாக்கி, அதனை விரும்பும் மொழிக்கு மாற்று என்ற ஆப்சனை கொடுத்துவிட்டால் அந்த வேலையை வாட்ஸ்அப் பார்த்துக் கொள்ளும்
0 Comments