ஆஸ்திரேலியா தடுமாற்றம் என ஒரு பதிவை எழுதி முடிப்பதற்குள் 3 விக்கெட்களை கழட்டி முடிவுரையே எழுதிவிட்டார்கள் ஆப்கானிஸ்தான்.
மற்ற அணிகள் எல்லாம் 4 பந்துவீச்சாளர்களுடன் போவதா 5 பந்துவீச்சாளர்களுடன் போவதா என சிந்திக்கும் வேளையில், 8 பந்துவீச்சாளர்களுடன் செல்கிறது ஆப்கான்.
8 பேருமே பகுதி நேரம் எல்லாம் இல்லை. நான்கு முழு ஓவர்களையும் வீசும் திறமைப்படைத்தவர்கள். இடையில் சில ஓவர்களில் ரன்கள் அதிகமாக போக கொண்டு வரப்பட்ட குல்புதின் நைப் தான் நான்கு விக்கெட்களை வீழ்த்தி சேதாரமாக்கிவிட்டார்.
இத்தோல்வியின் மூலம் இந்தியா - ஆஸ்திரேலியா, வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் போட்டி சூடுபிடிக்க போகிறது.
ஆப்கான் அணி ரன்கள் குறைவாக எடுத்துவிட்டதாக நமக்குத் தோன்றியது. ஆனால் ரஹ்மதுல்லா குர்பாஸ் - இப்ராஹும் ஜட்ரான் இணை அடித்த 118 ரன்கள் தான் போட்டியின் வித்தியாசம் என்பதை இப்போது உணர வைத்துவிட்டனர்.
0 Comments