Hot Posts

6/recent/ticker-posts

இன்றைய ராசி பலன்கள் Rasi Palan Today 16-06-2024


மேஷ ராசி - MESHAM RASI

மேஷ ராசி அன்பர்களே, நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பிரியமானவர்கள் பக்கபலமாக இருப்பர். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

ரிஷப ராசி - RISHABAM RASI

ரிஷப ராசி அன்பர்களே, முக்கிய பணிகள் நிறைவேறும். பெற்றோர்களின் அரவணைப்பு கிட்டும். உறவினர்களிடம் சின்ன மனஸ்தாபம் ஏற்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மிதுன ராசி - MITHUNAM RASI

மிதுன ராசி அன்பர்களே, யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். நட்பால் நல்லது நடக்கும். கோர்ட் வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கடக ராசி - KADAGAM RASI

கடக ராசி அன்பர்களே, குடும்ப பொறுப்புகள் ஏற்க வேண்டிவரும். எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். தவிர்க்க முடியாத செலவுகள் வரும். உத்யோகத்தில் வேலை பளு குறையும்.

சிம்ம ராசி -  SIMMAM RASI

சிம்ம ராசி அன்பர்களே, எதையும் ஒளிவு மறைவின்று பேசுவது நல்லது. விலை மதிப்புள்ள பொருட்களை கவனமாக கையாளவும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கன்னி ராசி - KANNI RASI

கன்னி ராசி அன்பர்களே, குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். குலதெய்வ வழிபாடு சிறக்கும். கடன் பிரச்சனை ஓரளவு குறையும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

துலாம் ராசி - THULAM RASI

துலாம் ராசி அன்பர்களே, சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். சில மருத்துவ செலவுகள் வரும். முன் கோபத்தை குறைப்பது நல்லது. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

விருச்சிக ராசி -  VIRUCHIKAM RASI

விருச்சிக ராசி அன்பர்களே, குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். காரிய தடை விலகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

தனுசு ராசி - DANUSU RASI

தனுசு ராசி அன்பர்களே, குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மகர ராசி - MAKARAM RASI

மகர ராசி அன்பர்களே, குடும்பத்தில் உங்கள் கருத்தை வரவேற்பர். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கும்ப ராசி - KUMBAM RASI

கும்ப ராசி அன்பர்களே, குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மீன ராசி - MEENAM RASI

மீன ராசி நேயர்களே, மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

Post a Comment

0 Comments