மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படங்களுக்கு சில திரையரங்குகளில் இன்றோடு இப்படம் நிறைவடைகிறது என்று போஸ்டர் ஒட்டுவதைப் பார்த்திருப்போம்..
அதே போல இன்றோடு இம்மைதானம் அழிக்கப்படுகிறது என்பதை கேட்க சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
உலகக்கோப்பைக்காக மிகப்பிரம்மாண்டமாக மிக குறுகிய காலத்தில் கட்டப்பட்ட நியூயார்க் மைதானம் இன்றோடு விடைபெறுகிறது. இன்று இந்தியா - அமெரிக்கா ஆடும் ஆட்டமே இறுதி ஆட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமே 8 ஆட்டங்கள் தான். இந்த உலகக்கோப்பையில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கிய மைதானம் என்றால் இது தான்.
இம்மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி 107 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 105 ரன்கள் மட்டுமே. 20 ஓவர் போட்டிகளுக்கு இது மிகவும் குறைவானது தான்.
இம்மைதானம் 8 ரன்களுக்கு 1 விக்கெட் வேண்டும் வேண்டும் என கேட்டு வாங்கிக் கொள்கிறதாம். இம்மைதானம் ஏற்கனவே இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை பலி வாங்கிவிட்டது.
இம்மைதானத்தில் தப்பித்தவர்கள் என்றால் அது தென்னாப்பிரிக்காவும், இந்தியாவும் தான். இந்தியா மட்டும் இங்கே தோல்வி பெற்றிருந்தால் மிகப்பெரிய சர்ச்சையே வெடித்திருக்கும்.
வெறும் 8 போட்டிகளோடு தனது ஆயுளை நிறைவு செய்யும் இம்மைதானம் உருவாக்க ஆன செலவு எவ்வளவு தெரியுமா? சுமார் 250 கோடி ரூபாய் மட்டுமே!
இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா தப்பிக்குமா? அல்லது அமெரிக்கா தாக்குப்பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
0 Comments