Hot Posts

6/recent/ticker-posts

வயதான மாப்பிள்ளைக்கு 2வது மனைவி வரலட்சுமி


சமீபத்தில் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் இணையதளத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. வலைதளத்தைத் திறந்தால் எங்கு பார்த்தாலும் அந்த நியூஸ் தான். அதில் என்ன விசேஷம் என்றால் இவ்வளவுக்கும் இது மாப்பிள்ளைக்கு 2ம் திருமணம். வரலட்சுமி பிரபல நடிகை. எப்படி சம்மதித்தார்? 

அவரது தந்தை சரத்குமார் இதற்கு எப்படி சம்மதித்தார் என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் எழுகிறது. வாங்க பார்க்கலாம். சரத்குமார் மகள் வரலட்சுமியின் திருமணம் தாய்லாந்தில் வெகுவிமரிசையாக நடந்தது. ராதிகா, சரத்குமார் எல்லாம் ஆட்டம் போட்டார்கள். கல்யாணத்தில் என்ன விசேஷம்னா வரலட்சுமியை விட வயதில் மூத்த மாப்பிள்ளையான நிக்கோலைக்கு 2வது திருமணம் தான் இது. 

இவருக்கு 18வயதில் ஒரு மகள் இருக்கிறாராம். அப்படி இருந்தும் வரலட்சுமி இந்தத் திருமணத்திற்கு சம்மதிக்க என்ன காரணம் என பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா.

வரலட்சுமி வந்து மாப்பிள்ளைக்கு 300 கோடியும், குட்டித்தீவையும் வரதட்சணையாகக் கொடுத்தார் என்று சொல்கிறார்களே என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்;. அதற்கு அப்படி சொல்வதை எல்லாம் நம்ப முடியாது. அது எப்படிங்க சாத்தியம் எனறார் அந்தனன். அவர் மேலும் சொன்னது இதுதான்.

சரத்குமார் வசதியானவர். ராதிகா வசதியா இருக்காங்க. அதெல்லாம் வேற. ஆனால் ஒரு தீவை வாங்கிக் கொடுக்கற இடத்தில் எல்லாம் அவர்கள் இல்லை. சரத்குமார் நிக்கோலைக்கு இரண்டாம் தாரமாக தனது மகளைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறார். அப்படி என்றால் அவர் எவ்வளவு பெரிய நபராக இருக்க வேண்டும்? பார்த்துப் பார்த்து வளர்த்தப் பொண்ணு. நடிகை.

Post a Comment

0 Comments