பொதுவாக கேரளா உணவுகள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாகத்தான் இருக்கும்.
அந்தவகையில், நெய் அப்பம் கேரளாவின் பாரம்பரிய உணவாகும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பியுண்ணும் கேரளா நெய் அப்பம் செய்வது சுலபமான ஒன்று.
தேவையான பொருட்கள்
பச்சரிசி மா- 1 கப்
ரவை- 2 ஸ்பூன்
மைதா- 2 ஸ்பூன்
வெல்லம்- ½ கப்
வாழைப்பழம்- 2
தேங்காய் துண்டுகள்- சிறிதளவு
கருப்பு எள்- 1 ஸ்பூன்
பேக்கிங் பவுடர்- 1 சிட்டிகை
ஏலக்காய் தூள்- ¼ ஸ்பூன்
நெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் வாழைப்பழங்களை எடுத்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
அதன் பிறகு அரிசி மா, ரவை, மைதா, ஏலக்காய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின் அடுப்பில் பாத்திரம் வைத்து வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் மாவில் தயாரிக்கப்பட்ட வெல்லப்பாகை ஊற்றி, கட்டிகள் எதுவும் உருவாகாமல் நன்கு கலக்கவும்.
இதற்கு பிறகு பொடியாக நறுக்கிய தேங்காய், கருப்பு எள் மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து மீண்டும் நன்கு கலக்கவும்.
இப்போது அடுப்பில் பணியாரம் செய்யும் கடாயை வைக்கவும், அது சூடானதும், நெய் ஊற்று மாவை ஊற்று பணியாரம் சுட்டு எடுத்தால் நெய் அப்பம் தயார்.
0 Comments