Hot Posts

6/recent/ticker-posts

Chamari அவுட் ஆனால் மொத்தமாக கவிழ்ந்துவிடும் என பயந்தபோது 3ஆவது விக்கட்டுக்காய் Kavishaவுடன் நின்னு தண்ணி காட்டியவர்.


Chamari அதிரடியா ஆடினப்போ சப்போர்ட் role ஆடி, சமரி அவுட் ஆனதும் அதிரடி mode க்கு மாறி இந்தியன் மகளிர் அணியை திக்குத்திக்காய் சிதறடிச்சவதான் இந்த ஹர்ஷித சமரவிக்கிரம..! Chamari அவுட் ஆனால் மொத்தமாக கவிழ்ந்துவிடும் என பயந்தபோது 3ஆவது விக்கட்டுக்காய் Kavishaவுடன் நின்னு தண்ணி காட்டியவர். 

Asia cup final இல் 8 விக்கட்டுகளால் இந்திய அணியை படுதோல்வி அடையச் செய்து ஶ்ரீலங்கன் கிரிக்கெட்டின் கொஞ்ச நஞ்ச மானத்தையாவது காப்பாற்றி வைத்திருக்கும் மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள்! விராட் கோஹ்லியை போல லேடி சூப்பர்ஸ்டார் மந்தனா, இன்னிக்கு டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடி நமக்கு ஆட்டத்தை சாதகமாக்கினார்  

வரலாற்றுச் சாதனை.. அதுவும் சிக்ஸ் அடித்து கப்பை தூக்குவதெல்லாம் தோனி ஸ்டைல் சாரே 

ஶ்ரீலங்கன் GOAT சமரி அத்தப்பத்துவிற்கு இன்னுமொரு மைல்கல் 

முக்கியமா WPL இல் உதாசீனப்படுத்தப்பட்ட ஶ்ரீலங்கன் மகளிர் வீராங்கனைகள் ஒன்றிணைந்து ஆறு சிக்ஸ் அடிக்க, WPL ஸ்பெஷலிஸ்ட் வீராங்கனைகள் வெறும் இரண்டு சிக்ஸுகள் தான் 

இதற்கு முன்பாக ஐந்து முறை ரன்னர்ஸ் அப் ஆகி ஆறாவது தடவை இம்முறை சேம்பியனாகியிருக்கிறார்கள். வாழ்த்துக்களும் நன்றிகளும், வீராங்கனைகளே 

Post a Comment

0 Comments