மேஷ ராசி - MESHAM RASI
மேஷ ராசி நேயர்களே, பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். பெற்றோருடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பணம் வரவில் தாமதம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
ரிஷப ராசி - RISHABAM RASI
ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தினர் தேவைகள் இனிதே பூர்த்தியாகும். அடிக்கடி டென்ஷன் ஏற்படும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
மிதுன ராசி - MITHUNAM RASI
மிதுன ராசி நேயர்களே, குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ளவும். முக்கியமான செயல்கள் கூட எளிதாக நிறைவேறும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் மதிப்பு கூடும்.
கடக ராசி - KADAGAM RASI
கடக ராசி நேயர்களே, குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும். மனதில் இருந்த பயம், பதற்றம் நீங்கும். முக்கியமான நபர் மூலம் நல்ல காரியம் கைகூடும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
சிம்ம ராசி - SIMMAM RASI
சிம்ம ராசி நேயர்களே, சிக்கலான காரியங்களை கூட எளிதில் முடிக்க முடியும். உறவினர்களிடம் இருந்த பகைமை மாறும். பொருளாதார மேன்மை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கன்னி ராசி - KANNI RASI
கன்னி ராசி அன்பர்களே, குடும்பத்தில் உங்கள் மதிப்பு கணிசமாக உயரும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யவும். பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
துலாம் ராசி - THULAM RASI
துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
விருச்சிக ராசி - VIRUCHIKAM RASI
விருச்சிக ராசி நேயர்களே, பொறுப்பான செயல்கள் நல்ல பலன்களை பெற்று தரும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத இடங்களில் அறிவுரைகளை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரம் சிறக்கும்.
தனுசு ராசி - DANUSU RASI
தனுசு ராசி அன்பர்களே, குடும்பத்தின் மீது பற்றும், பாசமும் அதிகரிக்கும். எடுத்த வேலையை சிரமமின்றி முடிக்க முடியும். எதிரிகள் விலகி நிற்பர். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
மகர ராசி - MAKARAM RASI
மகரம் ராசி நேயர்களே, குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
கும்ப ராசி - KUMBAM RASI
கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் குதூகலமும், ஒற்றுமையும் நிரம்பி இருக்கும். புதியவர்களின் நட்பு உற்சாகம் தரும். பயணங்களால் அலைச்சல் உண்டு. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
மீன ராசி - MEENAM RASI
மீன ராசி நேயர்களே, நீண்ட கால கனவுகளும் திட்டங்களும் நிறைவேறும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி நிலவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
0 Comments