Hot Posts

6/recent/ticker-posts

400 படங்களில் நடித்து, அனாதையான நடிகை ஜெயகுமாரி; பின்னணி என்ன?

1966ம் ஆண்டு தொடங்கி 1980ம் ஆண்டுகளின் துவக்கம் வரை டாப் நடிகையாக இருந்து இன்று வாழ்க்கையில் அடுத்த நாளை எப்படி கழிக்க போகிறோம் என்கின்ற கலக்கத்தோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஜெயக்குமாரி.

பிரகாசம் என்பவருடைய இயக்கத்தில் ஒரு படத்தை எடுக்க அவர் முடிவு செய்தார்.அதுவரை அவர் சம்பாதித்த அனைத்து பணமும் அந்த திரைப்படத்தில் போடப்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த படத்தை எடுக்க முடியாமல் போக தன்னுடைய வீடு வாசல் கார்களை விற்று மேலும் மேலும் அந்த படத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்.

இருப்பினும் இறுதிவரை ஒரு தயாரிப்பாளராக அவர் அந்த திரைப்படத்தில் செயல்பட முடியவில்லை. இந்த சூழலில் கடன் தொல்லை அதிகமாகி அவர் சட்ட ரீதியாக வழக்குகளை சந்தித்து சிறை சென்று திரும்பியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் சிறை சென்ற காலத்தில் அவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட அவரது கணவர் மற்றும் அவரது குழந்தைகள் கூட அவருக்கு உதவவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில் சென்னையில் உள்ள பெருங்குடி அருகே ஒரு குடிசையில் அவர் இத்தனை காலம் வாழ்ந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், பத்திரிக்கையாளர் ஒருவர் அவரை அண்மையில் சந்தித்து பேசி இருக்கிறார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர் தற்பொழுது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அண்மையில் சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவரை நேரில் சந்தித்து அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments