Hot Posts

6/recent/ticker-posts

60க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை...கேரள வீராங்கனை அதிர்ச்சி தகவல்!


கேரளாவை சேர்ந்த விளையாட்டு வீராங்கணை ஒருவர் தான் 60க்கும் மேற்பட்டோரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். 

கேரளாவை சேர்ந்த 18 வயதான இளம்பெண் ஒருவர் அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளார். விளையாட்டு வீராகனையான அந்த இளம்பெண் தான் 13 வயதில் இருந்தே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 13 வயதில் இருந்தே பயிற்றுநர்கள், விளையாட்டு வீரர்கள், நண்பர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். 

விளையாட்டு வீராங்கனை அளித்த புகாரின் அடிப்படையில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீராங்கனையின் வாக்குமூலத்தின்படி, அண்டை வீட்டு நபர்கள் உட்பட 62 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் பணிகளில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

Post a Comment

0 Comments