Hot Posts

6/recent/ticker-posts

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் பிக்கரிங் பகுதியில் வாழ்ந்த அழகிய குடும்பம் இது

மகிழ்ச்சிக்கு அளவில்லாத குடும்பம். இளம் குடும்பம் ஆயிரம் ஆயிரம் கனவுகளை தம்முள் சுமந்த குடும்பம்.

21.01.2025 இதில் உள்ள தகப்பனும் மகளும்  காரில் தம் வீடு நோக்கி  இரவு 7.30 மணியளவில் பயணப்பட்டு கொண்டிருக்கிறார்கள். 

கனடாவில் கடும் பனிப்பொழிவும் பனியால் வீதிகள் வழுக்குவதுமாக இருக்கிறது. ஏதோ ஒரு காலப்பிழையால் அவன் ஓட்டி சென்ற கார் ஓரிடத்தில் அடித்து விழுந்து ஓர் தெருவோர பள்ளத்தில் பாய்ந்துவிட்டது கார். 

கார் பாய்ந்துவிட்டதும் ஏதோ விபத்துக்குள்ளாகிவிட்டோம் என எண்ணி பதறி தன் மூன்று வயதே ஆண பெண் பிள்ளைக்கு என்ன நடந்ததோ என எண்ணி தகப்பன் காரிலிருந்து வெளியேறி தன் செல்ல மகளை தூக்கி கொண்டு என்ன ஆனதோ ஏது ஆனதோ என பதறி எல்லா புலனும் இழந்தவனாக அவளை இரு கைகளில் தூக்கி ஏந்தியவாறு பதறி போய் அவளை காப்பாற்றி ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் ஐந்தும் கெட்டவனாய் வீதியின் மறுவோறம் ஓடுகிறான் !! அப்போது தான் சாடார் என்று வேகமாய்  வந்த மற்றைய வாகனம் அவர்களை மோதி தள்ளுகிறது!!!!! இருவரும் இப்போது பிணமாக!!!

கனடா வாழ் தமிழ் மக்களை பனி உறைவுக்குள்ளும் இன்னும் உறைய வைத்த செய்த சேதி இது!!!!

ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்போம்!!

அடுத்த நொடி ஏது நடக்கும் என நிச்சயமில்லா  இந்த புதிரான வாழ்கையை இருக்கும் வரை வாழ்வை ரசித்து வாழ்வோம்


Post a Comment

0 Comments