Hot Posts

6/recent/ticker-posts

அகத்தி இலை சாறுடன் தேன் கலந்து உண்பதால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

பொதுவாக  அகத்தி கீரை நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து உறுப்புகளுக்கும் நன்மை பயக்கும் இந்த கீரையின் குணங்கள் ஆகும் ,இந்த கீரையின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்

1.இதிலிருக்கும் சுண்ணாம்பு சத்து மற்றும் புரத சத்துக்கள் நம் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் ,ஆரோக்கியத்துக்கும் மிக்க நன்மை பயக்கும்

2.அகத்திக் கீரையைப் பச்சையாக மென்று, சாற்றை விழுங்கினால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி நீங்கி நம் ஆரோக்கியத்துக்கு சிறப்பை தருகிறது .

3.இரத்தப் பித்தம் மற்றும் இரத்த கொதிப்பு ஆகியவை அகத்திக்கீரைகுணப்படுத்தும் .

4.அகத்திக் கீரை இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. அகத்தி கீரையில் நிறைய வைட்டமின் சி உள்ளது. இது இரத்த குழாய்கள் தடிமனாவதை தடுக்கிறது. ;

5.இந்த கீரை இரத்த சோகையை நீக்குகிறது. பொலிவிழந்த தோலிற்கும், கருவளையங்கள் நிறைந்த முகத்திற்கும் அகத்திக்கீரை ஒரு நல்ல தீர்வாக அமைந்து ஆரோக்கியம் தருகிறது

6.அகத்தி கீரையை அரைத்து உச்சந்தலையில் 1 மணிநேரம் வைத்திருந்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து விடும். .

7.அகத்திக் கீரையை அரைத்து ஆறாத புண்கள் மீது தடவினால், விரைவில் புண்கள் ஆறி  நன்மை பயக்கும்

8.அகத்தி இலைச்சாற்றை எடுத்து, அதனுடன் அதே அளவு தேன் கலந்து உண்டால் வயிற்று வலி நீங்கி வயிறுக்கோளாறுகளை நீக்கும்

Post a Comment

0 Comments