மேஷ ராசி - MESHAM RASI
மேஷ ராசி நேயர்களே, பிடிவாத போக்கால் பலரின் நட்பை இழக்க நேரிடும். பண தேவைகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
ரிஷப ராசி - RISHABAM RASI
ரிஷப ராசி நேயர்களே, குடும்ப பிரச்சனைகள் அகலும். மனதில் உள்ள அலைச்சல் டென்ஷன் குறையும். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மிதுன ராசி - MITHUNAM RASI
மிதுன ராசி நேயர்களே, குடும்ப சுமைகள் அதிகரிக்கும். உற்றார், உறவினர்களால் நன்மை உண்டு. பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
கடக ராசி - KADAGAM RASI
கடக ராசி நேயர்களே, பிரியமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். திருமண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
சிம்ம ராசி - SIMMAM RASI
சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் மருத்துவ செலவுகள் வரும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
கன்னி ராசி - KANNI RASI
கன்னி ராசி நேயர்களே, இழுபறியில் இருந்த காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
துலாம் ராசி - THULAM RASI
துலாம் ராசி நேயர்களே, குடும்ப நபர்களிடம் மனஸ்தாபம் வந்து நீங்கும். தடைகளை தகர்த்தெறியும் சாமர்த்தியம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
விருச்சிக ராசி - VIRUCHIKAM RASI
விருச்சிக ராசி நேயர்களே, குடும்ப அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ள முடியும். உறவினர்கள் இல்லம் நாடி வருவர். ஆன்மீக நாட்டம் கூடும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
தனுசு ராசி - DANUSU RASI
தனுசு ராசி நேயர்களே, திட்டமிட்ட வேலைகளை சிறப்பாக முடிக்க முடியும். கோப தாபங்களை குறைத்துக்கொள்ளவும். தூர பயணங்களால் அலைச்சல் இருக்கும். புது தொழில் யோகம் அமையும்.
மகர ராசி - MAKARAM RASI
மகர ராசி நேயர்களே, குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். கொடுக்கல், வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கும்ப ராசி - KUMBAM RASI
கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி கூட ஆரம்பிக்கும். எதிர்காலம் குறித்த யோசனை இருக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மீன ராசி - MEENAM RASI
மீன ராசி நேயர்களே, மனதிற்கு இதமான செய்தி வரும். பண விஷயங்களை கையாளும் போது கவனம் தேவை. வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
0 Comments