Hot Posts

6/recent/ticker-posts

வவுனியாவில் தோணிக்கல் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது!!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சமந்த விஜசேகர ஆலோசனையில், வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வழிநடத்தலில்,

வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் சாரங்க ராஜகுரு, பொலிஸ் சார்ஜன்ட்டுகளான திசாநாயக்க (37348), ரன்வெல (61518), பொலிஸ் கொன்தபிள்களான சிந்தக (78448), விதுசன் (91800), சாரதியான திஸாநாயக்க (18129) ஆகியோர் தலைமையிலான பொலிசார் விசேட நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது வவுனியா, தோணிக்கல் பகுதியில் 34 வயதுடைய இளைஞன் ஒருவர் 2 கிலோ கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கஞ்சா மீட்கப்பட்டதுடன் குறித்த இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments