நபரொருவரை கடத்திச் சென்று 8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் அரியகுளம் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி ஒருவரை கடத்திச் சென்று 8,478,000 ரூபா கொள்ளையடித்த குற்றச்சாட்டு தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, கொள்ளையுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த கொள்ளைச் சம்பவத்தை திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேக நபர், இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய்க்குப் புறப்படுவதற்காக விமான நிலையத்தை வந்தடைந்தபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலைய பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.
0 Comments