முத்துவுக்கு செல்வம் போன் போட்டு என்னுடைய காருக்கு ஆயிரம் ரூபாய் பைன் போட்டுட்டாங்க. நான் எல்லாமே சரியா வச்சு இருந்தும் அந்த கான்ஸ்டபிள் அருள் ஃபைன் போட்டுட்டாரு. நம்ம ஹோட்டல்ல வச்சு கிண்டல் பண்றதுக்காக இப்படி பண்ணிருக்கிறாரு என்று சொன்னதும் முத்து அவன் பழி வாங்கணும்னா என்னை தான பழி வாங்கணும்.
எதுக்காக உன்னை இப்படி பண்ணினான், சரியான நேரம் வரட்டும் அவன் கொட்டத்த அடக்குறேன் என்று பேசிக்கொண்டே வீட்டிற்குள் வர அந்த நேரத்தில் அங்கு வந்த விஜயா புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து கொட்டத்த அடக்குறேன்னு பேசிட்டு இருக்கீங்க என்று கோபப்பட்டு திட்டிவிட்டு போகிறார்.
இதனால் புரியாத முத்து மீனாவிடம் வந்து என்ன ஆச்சு என்று கேட்க, யாரோ அத்தைகிட்ட நான் அவங்க கொட்டத்தை அடக்குறேன்னு சொன்னதாக சொல்லி இருக்காங்க என்று சொல்ல, அதற்கு முத்து உனக்கு அப்போ எதிரிங்க அதிகமாகிட்டே இருக்காங்க நீ கவனமா இருக்கணும் என்று அட்வைஸ் செய்கிறார்.
மறுபக்கத்தில் சீதா ஹாஸ்பிடல் வந்து கான்ஸ்டபிள் அருண் அம்மாவை கவனித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அம்மா சீதாவை பற்றி விசாரிக்கும்போது சீதா தன்னுடைய அம்மா பூ கட்டுறாங்க, அக்காவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு, தம்பி படிச்சிட்டு இருக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு அருணின் அம்மா எனக்கு மருந்து மாத்திரையை விட நீ என்னை பாத்துக்கிட்டதால தான் சரியாயிடுச்சு என்று சீதாவை பாராட்டிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் மீனா போன் செய்து நாளைக்கு திருமண பங்க்ஷனுக்கு ஆர்டர் இருக்கு நீயும் வந்துருவியா என்று விசாரிக்கிறார். அதற்கு சீதா சரி என்று சொல்கிறார்.
பிறகு நீ ஒரு அம்மாவை கவனிக்கிறியே அவங்க எப்படி இருக்காங்க என்று விசாரிக்க, சீதா அருணின் அம்மாவிடம் ஃபோனை கொடுக்கிறார். அவரிடமும் மீனா நலம் விசாரிக்கிறார். அப்போது அருண் அம்மா சீதா பற்றி பெருமையாக பேசுகிறார். அதைக் கேட்டு மீனா சந்தோஷப்படுகிறார். பிறகு அருண் அம்மா அருணிடம் கண்ணை காட்ட அருண் சீதாவிற்கு பணத்தை கொடுக்கிறார்.
பிறகு வீட்டில் இருந்து எல்லாரையும் அனுப்பனும் என்று அவசர அவசரமாக எல்லாரையும் அனுப்பி கொண்டிருக்கிறார். அப்போது விஜயாவின் செயலை பார்த்து அண்ணாமலை சந்தேகப்படுகிறார். எதற்காக எல்லாரையும் சீக்கிரமா வீட்டை விட்டு போங்க என்று துரத்துற என்று கேட்க, அதற்கு டிராபிக் அதிகமாக இருக்கும் அதனால் தான் உங்களை அனுப்புறேன் என்று விஜயா சொல்கிறார்.
பிறகு முத்துவும் மீனாவும் பேசி சிரித்துக்கொண்டிருப்பதை பார்த்து கோபப்படுகிறார். பிறகு எப்படி எல்லாரும் வெளியே போனதும் மீனாவை வெளியே போக விடாமல் தடுக்கிறது என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் மீனா தன்னுடைய தோழிகளிடம் எல்லோருக்கும் போன் செய்து மண்டபத்தில் என்னென்ன வேலை செய்ய வேண்டும் என எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்
0 Comments