Hot Posts

6/recent/ticker-posts

இஷாரா செவ்வந்தியின் உருவத்திற்கு இணையான யுவதி ஒருவர் கைது!

கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி என்பவரின் உருவத்திற்கு இணையான 23 வயதான யுவதி ஒருவர் மத்துகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் தமது வீட்டிற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் மறைந்திருந்த நிலையில் பிடிபட்டுள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், குறித்த யுவதியின் கையடக்கத் தொலைப்பேசி பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, அடுத்த கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

மேலும், இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரர், கொலைக்கான தகவல்களை மறைத்ததற்காக கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments