நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக சமூக மாற்றத்திற்காக கட்சியில் பணியாற்றிய அவர், "கனத்த இதயத்துடன்" இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
காளியம்மாள், 2021 சட்டசபை தேர்தல் மற்றும் 2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர். அண்மையில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், காளியம்மாள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
காளியம்மாள் விலகிய பிறகு, திமுக, அதிமுக, த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் அவரை தங்களின் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அவர் எந்த கட்சியில் இணையப்போகிறார் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
காளியம்மாள் தனது அறிக்கையில், "கடந்த 6 வருடகாலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும், நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்
0 Comments