Hot Posts

6/recent/ticker-posts

திருகோணமலையில் இரட்டை கொலை: 15 வயது சிறுமி காயமடைந்து மருத்துவமனையில்

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவின் தாஹா நகர் பகுதியில் இன்று (14) அதிகாலை 4:30 மணியளவில் ஒரு மரண சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் சிறிதரன் தர்ஷினி என்பவரின் வீட்டில் இடம்பெற்றுள்ளது. இந்த வீட்டில் வசித்து வந்த சிறிதரன் ராஜேஸ்வரி (68) மற்றும் அவரது பெரியம்மா சக்திவேல் ராஜகுமாரி (74) ஆகிய இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சிறிதரன் ராஜேஸ்வரியின் கணவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இச்சம்பவத்தில், சிறிதரன் ராஜேஸ்வரியின் 15 வயது மகள் கூட வெட்டு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை குறித்து தெளிவாக தகவல் இல்லை.

இந்த கொலை சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மூதூர் பொலிஸார் இந்த வழக்கை குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொலைக்கு காரணம் மற்றும் சம்பவத்தின் விவரங்கள் குறித்து மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.

Post a Comment

0 Comments