யாழ்ப்பாணம், மருதடி வீதியில் உள்ள வீட்டொன்றில் வசந்தன் (41) என்பவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப பிரச்சனைகள் காரணமாக தனியாக வசித்து வந்த நிலையில், அவரின் சடலம் இன்று மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, மாயமான வசந்தனை தேடி வந்த உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரணக்காரணம் குறித்து உறுதிப்படுத்தும் நோக்கில், வசந்தனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
0 Comments