மாத்தறை - தேவேந்திரமுனை இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பான விசாரணையில், இந்தக் கொலை Rs 50 லட்சம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்தக் கொலையில் இரண்டு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் ஒருவர் பெண் ஆவார். இவர்கள் அனைவரும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என மாத்தறை பதில் நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
பொலிஸாரின் விசாரணையின்படி, இந்தக் கொலை போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான மோதலின் விளைவாக நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இரு தரப்பினருக்கிடையே நிலவிய மோதல் இந்தக் கொலைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்பது பொலிஸாரின் சந்தேகமாகும். இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
0 Comments