Hot Posts

6/recent/ticker-posts

மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் விபத்து: பாதசாரி உயிரிழப்பு; வாகன ஓட்டுநர் கைது

மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை, 14) அதிகாலை 6:30 மணியளவில் நடந்துள்ளது. தனியார் வங்கிக்கு முன்னால் வீதியை கடக்க முயன்ற பாதசாரி ஒருவரை ஹயஸ் ரக வாகனம் மோதியதில், அவர் உயிரிழந்தார். இறந்தவர் யாழ்ப்பாணம், கொக்குவில் காங்கேசன்துறை வீதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் மதுசகின் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

0 Comments