Hot Posts

6/recent/ticker-posts

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு - இளைஞர் விரல் துண்டிப்பு !

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவரின் விரல் துண்டாடப்பட்டுள்ள நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் கொக்குவில் பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் களஞ்சியசாலையினுள் இருந்த இளைஞரின் மீது வாள்வெட்டினை மேற்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில் விரல் துண்டாடப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் இளைஞன் அனுமதிக்கப்பட்ட நிலையில் விரலைப் பொருத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் முன்னெடுத்து வரும் நிலையில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments