Hot Posts

6/recent/ticker-posts

அனுராதபுரம் மருத்துவமனை சம்பவம் - பொலிஸார் தாக்கியதாக நீதிமன்றில் புகார்

அனுராதபுரம் வைத்தியசாலையில் ஒரு பெண் மருத்துவரை தகாத முறையில் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில், கைது செய்யப்பட்ட முன்னாள் படைவீரர் பொலிஸார் தன்னை கடுமையாக தாக்கியதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர் நேராக நிற்க முடியாத நிலையில் இருந்ததாகவும், இது பொலிஸாரின் கடுமையான தாக்குதலின் விளைவு எனவும் அவர் நீதவானிடம் கூறியுள்ளார். இதன் பின்னர், நீதவான் அவரை நேராக நிற்குமாறு பணித்தார்.

இந்த வழக்கில், சந்தேக நபரை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், சந்தேக நபரை 48 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான மேலும் விசாரணைகள் நடைபெறுகின்றன.

Post a Comment

0 Comments