முல்லைத்தீவு பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர், நேற்று இரவு 10:00 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து முல்லைத்தீவு - பரந்தன் வீதியில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதால் ஏற்பட்டது. விபத்தில் படுகாயமடைந்த இளைஞர், போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்தவர் நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த 28 வயது மதுசன் குணசிங்கம் என்பவர். இவரது சடலம் உடற்கூற்று சோதனைக்காக போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments