Hot Posts

6/recent/ticker-posts

டிக் டாக் இலக்கியா சர்ச்சை: வெளிநாட்டு பார்ட்டிகளில் நடனம் மற்றும் அதற்குப் பிறகும் என்ன நடக்கிறது?

டிக் டாக் Youtube இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் மோசமான ஆடைகளை அணிந்து கொண்டு மோசமான நடன அசைவுகளை வெளிப்படுத்தி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு இணையவாசிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பவர் தான் டிக் டாக் இலக்கியா. 

இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். குறிப்பாக வெளிநாடுகளில் பலான தொழிலில் ஈடுபடுவது குறித்து சக இன்ஸ்டாகிராம் பிரபலமான பெண் ஒருவருடன் இலக்கியா பேசிய ஆடியோ காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை கிளப்பியது. 

இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் இலக்கியாவிடம் பேட்டி கண்டார். அப்போது துபாய் போன்ற நாடுகளில் இரவு நேர பார்ட்டிகளில் நடனம் ஆடுவதற்கு இங்கிருந்து நிறைய நடிகைகள் டான்ஸர்கள் சென்றிருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். 

அங்கே நடனம் தாண்டி பல்வேறு விஷயங்கள் அரங்கேறுவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்களும் அது போல சென்று நடனமாடியுள்ளீர்கள்.. அப்படி நடப்பது அது உண்மையா..? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த இலக்கியா. 

ஆம், உண்மை தான். ஆனால் அங்கே யாரும் அத்துமீறி அதை செய்ய மாட்டார்கள். நம்முடைய அனுமதியின் பேரில் தான் அது நடக்கும். உதரணமாக, ஒருவர் நம் மீது ஆசை கொள்கிறார் என்றால் அதனை நாம் ஒத்துக்கொண்டால் மட்டுமே மேலே சொன்ன சமாச்சாரங்கள் நடக்கும். 

ஒரு வேளை நமக்கு பிடிக்கவில்லை என நாம் மறுத்து விட்டால் அதன் பிறகு வற்புறுத்த மாட்டார்கள். நாம் அனுமதித்தால் மட்டுமே அவர்களை உள்ளே விடுவார்கள் என்று பேசி இருக்கிறார். இலக்கியா இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Post a Comment

0 Comments