கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிருஸ்ணபுரம் கிராம அலுவலர் மீது நடந்த தாக்குதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 8 - மகளீர் தினத்தன்று நடந்த இந்த சம்பவம், அதிகாரிகள் மீது உள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
குறித்த கிராம அலுவலர் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, நற்சான்றிதழ் பெற வந்த குடும்பத்தினரிடம் தேவையான தகவல்களை கேட்டுள்ளார். அதற்கிடையில், சரியான தகவல் வழங்க மறுத்த அவர்கள், கிராம அலுவலரை நேரடியாக தாக்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், தாக்குதலை தடுக்காமல் வெறும் பார்வையாளர்களாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பகிரங்கமாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பொலிசாரின் அலட்சியம் மீதான மக்கள் எதிர்ப்பு சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகிறது.
0 Comments