இந்த சம்பவம் கடந்த திங்கள்கிழமை அமெரிக்காவின் ஹூஸ்டனில் இருந்து பீனிக்ஸ் நோக்கி புறப்பட்ட சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்தது. விமானம் 30,000 அடி உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, ஒரு பெண் பயணி திடீரென விமானத்திலிருந்து இறங்க வேண்டும் என்று விமான ஊழியர்களிடம் கூறினார். விமான ஊழியர்கள் அவரது கோரிக்கையை மறுத்தபோது, அந்தப் பெண் தனது உடைகளை அனைத்தையும் கழற்றி நிர்வாண நிலையில் சத்தமாக கத்த ஆரம்பித்தார்.
இந்த நிலையில், அவர் ஆடைகளை கழற்றியவாறே 25 நிமிடங்கள் விமானத்தின் உள்ளே ஓடினார். இதனால் விமானத்தில் பயணித்து வந்த மற்ற பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக, விமானம் மீண்டும் ஹூஸ்டனுக்குத் திரும்பி தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த சம்பவத்தின் காரணம் மற்றும் அந்தப் பெண்ணின் மனநிலை பற்றிய விவரங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. விமான நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த சம்பவத்தை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments