Hot Posts

6/recent/ticker-posts

யாழ் வட்டுக்கோட்டையில் 14 வயதுச் சிறுமிக்கு பணம் கொடுத்து மன்மத லீலை

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள தொல்புரம் பகுதியில் 14 வயதுச் சிறுமி மீது தவறான நடத்தை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரு ஆண்கள் நேற்று (ஏப்ரல் 28) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். நீதிவான் அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட இருவரும் 45 மற்றும் 52 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர், குறித்த சிறுமி கடந்த மூன்று ஆண்டுகளாக இச்சிக்கலில் சிக்கியிருப்பதை அடுத்தே, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு தாக்கல் செய்தார். அதன் பின்னர், வட்டுக்கோட்டை பொலிஸார் நடவடிக்கையில் ஈடுபட்டு, ஏற்கனவே இரண்டு பெண்கள் உட்பட மூவரை கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. 

Post a Comment

0 Comments