யாழ்ப்பாணத்தில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 22 வயது இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார். சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியை சேர்ந்த கவிந்தன் சாமினி எனக் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் திகதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு, முதலில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவரது உடல்நிலை சீராகாத காரணத்தால், 19 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
ஆனால், தொடர்ந்த சிகிச்சையிலும் உயிரை காக்க முடியாமல், அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனைகளில், மூளைக் காய்ச்சலே மரணத்திற்கு காரணமாக அமைந்தது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரியான ஆ. ஜெயபாலசிங்கம் முன்னெடுத்துள்ளார்.
மூளைக் காய்ச்சல் தொடர்பாக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
0 Comments