Hot Posts

6/recent/ticker-posts

திருகோணமலை அருகே கோர விபத்து – ஒருவர் உயிரிழப்பு, 27 பேர் காயம்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய்-அக்போபுர பகுதியில் இன்று (ஏப்ரல் 14) காலை நடைபெற்ற மோசமான வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 27 பேர் காயமடைந்துள்ளனர்.

அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 86வது மைல் கல்லில் இடம்பெற்ற இந்த விபத்தில், கண்டி மாவட்டம் மாவனல்லைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை கொண்டு திருகோணமலை நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று, எதிரே வந்த இராணுவ பார ஊர்தியுடன் நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர், 25 வயதான முகமட் அஸ்கர் முகமட் அர்சாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்த 25 பயணிகள் தற்போது கந்தளாய் மற்றும் திருகோணமலை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், பஸ்ஸின் பின்னால் வந்த கெப் வண்டி ஒன்றும் அதே பஸ்ஸுடன் மோதியதால், அதில் பயணித்த சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அக்போபுர பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Post a Comment

0 Comments