வவுனியா, தோணிக்கல் பகுதியில் 2023 ஜூலை 23 ஆம் தேதி இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் வீடு புகுந்து பெற்றோல் ஊற்றி கணவன், மனைவி இருவரும் எரிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதற்கமைவாக 6 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் நடைபெற்றன.
சம்பவம் தொடர்பான விசாரணை வவுனியா மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், சந்தேகநபர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த நீதிபதி எம்.எம்.எம். மிஹாஸ், விசேட காரணங்கள் இல்லாத காரணத்தால் பிணை வழங்க உத்தரவிட்டார்.
இதற்கமைவாக, 5 சந்தேகநபர்களுக்குத் தலா 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையும், 5 இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள இரண்டு சரீரப் பிணையும் விதிக்கப்பட்டது. மேலும், மாதாந்தம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வரவை பதிவு செய்ய வேண்டும் என்பதும், நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை செய்யப்பட்டதுமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
0 Comments