Hot Posts

6/recent/ticker-posts

74 வயது மூதாட்டி மீது பாலியல் தொல்லை: 24 வயது இளைஞன் கைது

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் தோட்டப் பகுதியில் 74 வயது மூதாட்டி மீது பாலியல் தொல்லை விளைவித்தமை தொடர்பாக, 24 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் வெறுப்படைந்த பகுதிய இன்று (23) ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியனர். "குற்றவாளிகளை கைது செய்", "போதை பொருளை ஒழிப்போம்" எனும் பதாதைகளை ஏந்தியபடி, சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போதைப் பொருளால் பாதிக்கப்பட்ட நிலையில் குறித்த இளைஞர், கடந்த 20ஆம் திகதி மூதாட்டியின் வீட்டில் புகுந்து பாலியல் தொல்லை ஏற்படுத்தியதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மே 04 வரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மூதாட்டி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஹட்டன் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Post a Comment

0 Comments