ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒரு கொடூரமான சம்பவம், சமூகத்தை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி இருக்கிறது.
மதுரவாடா காலனியை சேர்ந்த ஞானேஸ்வர ராவ் மற்றும் அனுஷா இருவரும், பெற்றோர் எதிர்ப்பை மீறி இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். தங்களது குடும்ப வாழ்க்கையை அமைதியாக நடத்தி வந்த நிலையில், அனுஷா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன், ஏழாம் மாத வளைகாப்பு விழாவும் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டிருந்தது. ஆனால், அண்மையில் ஞானேஸ்வருக்கு மனைவியிடம் சந்தேகங்கள் தோன்றி, இடையிடையே வாக்குவாதங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று, அனுஷாவுக்கு பிரசவம் நடைபெறவிருக்கும் நேரத்திற்கு முன்னதாக இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் சண்டையாக மாறிய நிலையில், ஞானேஸ்வர் தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
தொடர்ந்து, அனுஷா மயக்கம் அடைந்துவிட்டதாக கூறி, அவரது உறவினர்களிடம் தகவல் தெரிவித்து, வீட்டிற்கு வரச் சொன்னார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அனுஷா, குறித்த நேரத்திற்கு முன்னதே இறந்துவிட்டதாகவும், அவருடைய வயிற்றிலிருந்த குழந்தையும் உயிரிழந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அனுஷாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ஞானேஸ்வர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரிடம் விசாரணையின் போது, மனைவியின் மீதான சந்தேகத்தால் தான் இந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
புதிய உயிரை எதிர்நோக்கிய பெண்ணின் வாழ்க்கையை இந்தச் சம்பவம் நேரத்தில் நிறுத்தியிருப்பது, சமூக மனதிற்கு பெரும் புண்காயமாக அமைந்துள்ளது.
0 Comments