யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி பகுதியில் இரண்டொரு நாளாக தொடரும் இரட்டை மரணங்கள் சமூகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.
வரணி பகுதியில் உள்ள ஒரு குளத்தில் தாமரைப்பூ பறித்தபோது நீரில் மூழ்கி 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் நேற்று (17) சுட்டிபுரத்திற்கு அருகிலுள்ள குளமொன்றில் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பொலிசார் மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த இளைஞனின் மரண செய்தி காதலிக்குத் தெரியவந்தவுடன், அதனைத் தாங்க முடியாமல் 18 வயது காதலி இன்று (18) அதிகாலை தனது வீட்டில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துள்ளார். உயிரிழந்த யுவதியின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த இரட்டை மரணமும் குறித்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
0 Comments