குருணாகலை மாவட்டம் ரிதீகம – வெலெகெதர – ஷகரலிய வத்த பகுதியில், தனது பாடசாலை மாணவர்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளாகி, கடுமையாக காயமடைந்த திலிண விராஜ் என்ற 11ஆம் தர மாணவன், சுமார் ஏழு நாட்கள் குருணாகலை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்றும் உயிரிழந்துள்ளார்.
திலிண, கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வில் பங்கேற்க செல்லும் வழியில், அதே பாடசாலையின் சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்கள் குழுவினர் மற்றும் வெளியாட்கள் குழுவினரால் தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில், தலையில் தாக்கப்பட்டதையடுத்து அவர் முதலில் மாவத்தகம வைத்தியசாலையில், பின்னர் குருணாகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று உயிரிழந்த மாணவனின் மரண செய்தி தெரிந்தவுடன், வெளிநாட்டில் இருந்த அவரது தாயார் நாடு திரும்பியுள்ளார். சம்பவம் தொடர்பாக இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஷகரலிய தோட்ட பகுதி மக்கள் பொலிஸ் நிலையத்தின் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
0 Comments