பெஸ்டியன் மாவத்தையில் 2015 ஜூலை 29 ஆம் திகதி பயணப்பொதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட தர்மராஜா கார்த்திகா என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில், பெட்ரிக் கிருஸ்ணராஜா என்பவருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
விசாரணைகளின் போது, கார்த்திகா செட்டியார் தெருவிலுள்ள விடுதியில்தான் கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் பயணப்பொதியில் அடைத்து பேருந்து தரிப்பிடத்தில் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
10 ஆண்டுகளாக நீண்ட விசாரணை முடிவில், நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் குற்றம் எவ்வித சந்தேகமும் இல்லாமல் நிரூபிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தாம் நிரபராதி என குற்றவாளி தெரிவித்த போதும், நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
0 Comments