யாழ்ப்பாணத்தில் நேற்று (24ஆம் திகதி) இரத்தினபுரி – கீரிமலை கூவில் பகுதியில் குடும்ப பெண்ணொருவர் தம்முடைய வீட்டு தண்ணீர் தொட்டியடியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர், டேவிட் குணவதி என்ற குடும்ப பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தனது கணவனுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று உடல் சுகயீனம் காரணமாக, மருந்து வாங்க தனது கணவனை கடைக்கு அனுப்பியிருந்தார். கணவன் மருந்துடன் வீடு திரும்பியபோது, அவரது மனைவி தண்ணீர் தொட்டியடியில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக சடலம் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், குறித்த பெண் மாரடைப்பால் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயத்தில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் தலைமையில் மரண விசாரணை நடைபெற்று வருகின்றது.
0 Comments