Hot Posts

6/recent/ticker-posts

மட்டக்களப்பு கிரான்குளம் விநாயகர் வித்தியாலய மாணவி திடீர் சுகயீனமால் உயிரிழப்பு


மட்டக்களப்பு கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரான இராஜன் வினோஜினி (வயது 16) இன்று (ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை) திடீர் சுகயீனமடைந்து உயிரிழந்த வருத்தகரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வழக்கம்போல் பாடசாலைக்கு சென்ற மாணவி, வகுப்பறையில் வாந்தி எடுத்து மயக்கமுற்ற நிலையில் உடனடியாக செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக நோயாளர் காவு வண்டியில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த மாணவி, கிரான்குளம் 8ஆம் பிரிவைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகி வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மாணவியின் சடலம் தற்போது களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற அனுமதியை பெற்று பிரேத பரிசோதனை நடத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த திடீர் மரணம் கல்வி சமூகம் மற்றும் மாணவியின் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments