பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் பகுதியில் நடந்துள்ள ஒரு கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ராணுவ வீரர் முகேஷ் சிங், தனது 25 வயதுடைய மகளை ஆணவக் கொலை செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகேஷ் சிங்கின் மகள், தனது கல்லூரியில் படித்த வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்தார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி, ஏப்ரல் 4ம் தேதி காதலனுடன் டெல்லி சென்ற இளம் பெண்ணை, பின்னர் தந்தை சமாதானப்படுத்தி வீட்டிற்கு வரவழைத்தார்.
ஆனால் வீடு திரும்பிய பிறகு, தந்தையான முகேஷ் சிங் தன் மகளை கொலை செய்து, சடலத்தை வீட்டின் பாத்ரூமில் பூட்டி வைத்திருந்தது போலிஸாருக்கு கிடைத்த தகவலால் வெளிச்சம் பார்த்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
மனைவியின் புகாரின் அடிப்படையில் நடந்த போலீஸ் விசாரணையில், கொடூரமான உண்மை வெளியேறியுள்ளது. தற்போது முகேஷ் சிங் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம், சமூக விரோத காட்சிகள் இன்னும் எவ்வளவு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்பதைக் காட்டுகிறது.
0 Comments