கொழும்பில் இருந்து காலிக்கு விடுமுறைக்காக சென்ற குடும்பம், பிரபல ஹோட்டலில் உணவை ஓர்டர் செய்து காத்திருந்த வேளையில் அதிர்ச்சி சம்பவம் நேர்ந்துள்ளது.
உணவு தீர்ந்துவிட்டது என கூறிய ஹோட்டல் ஊழியர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம், இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் 28 வயது இளைஞருக்கு தலையில் காயம், 17 வயது சிறுவனுக்கு கண் மற்றும் உடலில் காயங்கள், மேலும் 14 வயது சிறுவனுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டோர் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, இன்னும் நீதியளிக்கப்படவில்லை எனும் குறைவும் வெளியிட்டுள்ளனர்.
0 Comments