யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவன் ஒருவன் இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொட்டகலை புனித அன்ருஸ் தோட்டத்தைச் சேர்ந்த கருப்பையா கவிரத்தினம் (24) என்பவரே உயிரிழந்துள்ளார். அவர் கொக்குவில் பிரவுண் வீதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து கல்வி பயின்றுவந்தார்.
இன்று அதிகாலை காதலியுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து அவர் தூக்கிட்டு உயிரிழந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது உடல் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டது.
கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments