திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டி பன்றிமலை அமைதிச்சோலை அருகே ஏப்ரல் 13ஆம் தேதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண் உடல் தொடர்பான மர்மம் தற்போது வெளிவந்துள்ளது.
இது தொடர்பாக கன்னிவாடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர் மாரியம்மாள் (21) என்ற இளம்பெண் மதுரை ஆசிரமத்தில் வளர்ந்தவர் என தெரியவந்தது. இவர் நத்தம் சாணார்பட்டியைச் சேர்ந்த பிரவீன் (23) என்பவரை காதலித்து வந்தார்.
ஏப்ரல் 12ஆம் தேதி, பிரவீன் தனது மோட்டார் சைக்கிளில் மாரியம்மாளை அமைதிச்சோலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளிலும் இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்த விசாரணையில், திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கோபம் அடைந்த பிரவீன், மாரியம்மாளை கொலை செய்து பின்னர் அவரது உடலை பெற்றோல் ஊற்றி எரித்ததாக போலீசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து, பிரவீனை கைது செய்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொடூரம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments