கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் படுகாயமடைந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 5.35 மணியளவில் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி அவரை இருமுறை தாக்கினர். ஆரம்ப விசாரணைகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உதார சதுரங்க, வட்டிக்கு பணம் வழங்கல் மற்றும் பல வணிகங்களை நடத்தி வருபவர் என தெரியவந்துள்ளது. காயமடைந்த அவர் முதலில் மினுவங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவ இடமான வீட்டின் அறையில் இருந்து இரண்டு வெற்று துப்பாக்கி தோட்டா உறைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
0 Comments