இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் இடம்பெற்ற கோரமான வாழ்க்கைத்துணை கொலை சம்பவம் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மீரட் மாவட்டத்தின் அக்பர்பூர் கிராமத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம், குடும்ப உறவுகளில் உள்ள இருண்ட உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.
கூலித் தொழிலாளியான அமித் என்பவர், தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். முதலில் பாம்பு கடித்ததாலேயே அவர் உயிரிழந்ததாக நம்பப்பட்டது. மேலும் பாம்பு அவரது உடலை தீண்டும் காணொளியும் வைரலானது.
ஆனால், பிறகு வெளியாகிய பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கையில், அமித் பாம்பு கடிக்கும் முன்னர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இது, பாம்பு கொலையை மறைக்கும் கருவியாக பயன்படுத்தப்பட்டதைக் காட்டியது.
தொடர்ந்த போலீஸ் விசாரணையில், அமித்தின் மனைவி, தனது காதலனுடன் சேர்ந்து குற்றத்தை திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். அமித் தூங்கிக்கொண்டிருந்தபோது இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். பின்னர், மரணத்தை வேறு வழியில் திசை திருப்பும் நோக்கில், ₹1000க்கு பாம்பை வாங்கி, அமித்தின் உடலில் அதை விடுத்துள்ளனர். மேலும், பாம்பு 10 முறை கடிக்க வைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள், சமூகத்தில் திருமண உறவுகளில் உள்ள நம்பிக்கையின் மீதான கேள்விகளை எழுப்புகின்றன. தற்போது, அமித்தின் மனைவியும் அவரது காதலனும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments