Hot Posts

6/recent/ticker-posts

ஓமந்தையில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை – பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட துயர சம்பவத்தில், 50 வயதான குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பன்றிக்கெய்தகுளத்தைச் சேர்ந்த அவர், தனது வீட்டில் உள்ள காற்றழுத்த இயந்திரத்தின் உதவியுடன் முச்சக்கர வண்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, தவறுதலாக மின்சாரம் தாக்கியதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments