Hot Posts

6/recent/ticker-posts

காதலுக்காக கணவரை கொன்ற மனைவி: உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒருவர் தனது காதலனுடன் இணைந்து கணவரை கொன்ற சம்பவம் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இந்தக் கொலையின் சூடு இன்னும் ஆறாத நிலையில், மீண்டும் ஒரே மாநிலத்தில் இதேபோன்ற ஒரு கொடூரம் பதிவாகியுள்ளது.

இந்த பயங்கர சம்பவம் பிஜ்னோர் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. அங்கு வசித்து வந்த தீபக் குமார் (29) என்பவர் ரயில்வே துறையில் பணியாற்றி வந்தார். அவருக்கும் ஷிவானி என்ற பெண்ணுக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் எல்லாம் சாதாரணமாக இருந்த நிலையில், தீபக் மத்திய ரிசர்வ் போலீசில் பணியாற்றியதையும் விட்டு விட்டு குடும்ப வாழ்க்கைக்காக ரயில்வேயில் வேலை செய்துவருகிறார்.

ஆனால், கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி, தீபக்கின் சகோதரருக்கு ஷிவானி தொலைபேசியில் அழைத்து, "தீபக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளேன்," என தகவல் அளித்தார்.

உடனே மருத்துவமனைக்கு சென்ற பியுஷ், தன் சகோதர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்தவர்கள் தெரிவித்ததாக கூறுகிறார். இதேவேளை, ஷிவானி உடற்கூறு ஆய்வைத் தவிர்க்க முயற்சி செய்ததையும் காணலாம். இதில் பியுஷுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் ஏப்ரல் 6ஆம் தேதி வந்த உடற்கூறு அறிக்கையில் தீபக் மாரடைப்பால் அல்ல, கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, ஷிவானி மீது பல்வேறு சந்தேகங்கள் உருவாகின்றன.

பொலிசார் தற்போது ஷிவானி தீபக்கை கொலை செய்து அவரது வேலை வாய்ப்பை கைப்பற்ற திட்டமிட்டிருப்பதாக கூறி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இக்கொலையில் மற்றொரு நபரின் தொடர்பும் இருப்பதாகவும் சந்தேகம் வைக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments