Hot Posts

6/recent/ticker-posts

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இளம் குடும்பப் பெண் தீ வைத்து தற்கொலை

யாழ்ப்பாணம் இணுவில் கிழக்கு, கொக்கன் வளவுப் பகுதியில் வசிக்கும் நிவேதனன் விஜிதா (30 வயது) என்ற இளம் குடும்பப் பெண், நேற்றைய தினம் (28 ஏப்ரல்) தனக்குத் தானே தீ வைத்து உயிரிழந்தார்.

விசாரணைகளின் மூலம், மனவிரக்தி காரணமாக இந்த தற்கொலைச் சம்பவம் இடம்பெற்றது தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று குளிக்கப் போனதாக கூறி சென்ற அவர், தன்னையே தீயில் காய்ச்சி உயிரை மாய்த்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மரண விசாரணைகளை மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனை முடிவின் பிறகு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments